தமிழ் இழுத்த இழுப்புக்கு யின் அர்த்தம்

இழுத்த இழுப்புக்கு

வினையடை

  • 1

    (ஒருவருடைய) விருப்பங்களுக்கெல்லாம் வளைந்து கொடுத்து.

    ‘அவர் எனக்குப் பண உதவி செய்தார் என்பதற்காக அவர் இழுத்த இழுப்புக்கு என்னால் நடந்து கொள்ள முடியாது’
    ‘அதுவோ பழைய வண்டி. நீ இழுத்த இழுப்புக்கு அது வர வேண்டும் என்று எதிர்பார்க்கலாமா?’