தமிழ் இழுப்பு யின் அர்த்தம்

இழுப்பு

பெயர்ச்சொல்

 • 1

  இழுத்தல்.

  ‘பளுதூக்கியின் இழுப்புச் சக்தி அதிகம்’

 • 2

  வலிப்பு (நோய்).

  ‘இழுப்பு நோய் உள்ளவர்கள் நீர்நிலைக்குச் செல்லும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’

 • 3

  (புகை, பொடி முதலியவற்றை) உறிஞ்சுதல்.

  ‘இரண்டு இழுப்பில் பீடி பாதியாகப் போய்விட்டது’

 • 4

  மூச்சுத் திணறல்.

  ‘இழுப்பும் இருமலும் அதிகமாகிப் படுக்கவோ உட்காரவோ முடியாமல் அவர் சிரமப்பட்டார்’

 • 5

  (பேச்சில் தயக்கத்தைக் காட்டும்) நீட்டிப்பு.

  ‘‘ஐயா...’ என்று ஓர் இழுப்போடு ஆரம்பித்தார்’

 • 6

  வட்டார வழக்கு (நீரின்) வேகம்.

  ‘ஆற்றில் இந்த இடத்தில் இழுப்பு அதிகம்’