இழை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இழை1இழை2இழை3இழை4

இழை1

வினைச்சொல்இழைய, இழைந்து, இழைக்க, இழைத்து

 • 1

  (ஒன்று) உணரத்தக்க முறையில் வெளிப்படுதல்.

  ‘அவள் குரலில் பாசம் இழைந்தது’
  ‘நான் சொன்னதை முகத்தில் புன்னகை இழைய அவன் கேட்டுக்கொண்டிருந்தான்’

 • 2

  (இசைவாக) இணைதல்.

  ‘குழலின் இசையும் வீணையின் நாதமும் இழைந்து மனத்தை மயக்கின’

 • 3

  ஒட்டி உறவாடுதல்.

  ‘நீங்கள் எப்படியெல்லாம் இழைந்தீர்கள் என்பது எனக்குத் தெரியும்’

 • 4

  (உடை உடலோடு) பொருந்திப் படிந்திருத்தல்.

  ‘மஞ்சள் நிற மேனியில் இழைந்து ஒளிர்ந்தது மெல்லிய பட்டுச் சேலை’

இழை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இழை1இழை2இழை3இழை4

இழை2

வினைச்சொல்இழைய, இழைந்து, இழைக்க, இழைத்து

 • 1

  (மரச் சட்டம், பலகை போன்றவற்றை வழவழப்பாக்கவும் கனத்தைக் குறைக்கவும் இழைப்புளியால்) சீவுதல்; தேய்த்தல்.

  ‘இந்தக் கட்டையின் நடுப்பகுதியை இன்னும் சிறிது இழைத்த பிறகு வர்ணம் பூசலாம்’
  ‘சொரசொரப்பை நீக்குவதற்காக அந்தப் பலகையை நன்றாக இழைத்துக்கொள்ள வேண்டும்’

 • 2

  (சந்தனம், மஞ்சள் முதலியவற்றைச் சிறிது தண்ணீர் விட்டுக் கல் போன்றவற்றில்) தேய்த்தல்.

  ‘மஞ்சள் இழைக்கும் கல்’
  ‘மாசிக்காயை இழைத்துக் குழந்தைகளுக்கு மருந்தாகத் தருவார்கள்’
  உரு வழக்கு ‘காம்போதியை வித்வான் வயலினில் மெய்மறக்க இழைத்தார்’

 • 3

  (ஜரிகையால் சேலை அல்லது கரை) நெய்தல்.

  ‘முழுவதும் ஜரிகையால் இழைக்கப்பட்ட முகூர்த்தப் புடவை’

 • 4

  (முத்து முதலிய மணிகளை நகையில்) பதித்தல்.

  ‘வைரம் இழைத்த கிரீடம்’
  ‘கல் இழைத்துச் செய்த அட்டிகை’

 • 5

  இலங்கைத் தமிழ் வழக்கு (பாய், கூடை முதலியவற்றை) பின்னுதல்.

  ‘முற்றத்தில் வட்டமாக உட்கார்ந்து பாய் இழைக்கத் தொடங்கிவிட்டனர்’
  ‘பாய் இழைக்கும்போது சத்தகம் கையை வெட்டிவிட்டது’

இழை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இழை1இழை2இழை3இழை4

இழை3

வினைச்சொல்இழைய, இழைந்து, இழைக்க, இழைத்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (குற்றம், துரோகம் போன்ற செயல்களைக் குறிக்கும் சொற்களோடு மட்டும்) செய்தல்; புரிதல்.

  ‘நான் உனக்கு என்ன துரோகம் இழைத்தேன்?’
  ‘தான் தவறு இழைத்துவிட்டதை நினைத்து அவன் வருந்தினான்’
  ‘அவர் இழைத்த அநீதிக்கு அளவில்லை’
  ‘ரசாயன உரங்களை நீண்ட காலம் பயன்படுத்துவது மண்வளத்துக்குத் தீங்கிழைக்கக்கூடும்’

இழை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இழை1இழை2இழை3இழை4

இழை4

பெயர்ச்சொல்

 • 1

  (நூலாகத் திரிக்கப்படும்) பஞ்சில் இருக்கும், மிக மெல்லிய நாரினால் ஆன பொருள்.

  ‘இழைகள் நைந்து பழுப்பேறிய வேட்டி’
  ‘சில பருத்தி வகைகள் நீளமான இழைகளைத் தரும்’
  ‘துணியில் இழைகளுக்கு இடையே இடைவெளி அதிகமாக இருந்தால் துணி அதிக நாள் உழைக்காது’

 • 2

  தாவரங்களில் இயற்கையாகக் காணப்படும் அல்லது சில உலோகங்களிலிருந்தும் ரசாயனப் பொருள்களிலிருந்தும் தயாரிக்கப்படும் நூல் போன்ற பொருள்.

  ‘சுற்றப்பட்ட உலோக இழையில் மின்சாரத்தைப் பாய்ச்சினால் அதற்குக் காந்தசக்தி கிடைக்கிறது’

 • 3

  (கதையின் அல்லது விவாதத்தின் பகுதிகளை ஒன்றோடொன்று தொடர்புபடுத்தும்) இணைப்புச் சரடு.

  ‘பேசும்போது குறுக்கிட்டால் சொல்லவந்த செய்தியின் இழை அறுந்துவிடுகிறது’
  ‘மரபுதான் இந்தக் கதையின் இழை’