தமிழ் இவ்வளவு யின் அர்த்தம்

இவ்வளவு

பெயர்ச்சொல்

  • 1

    இந்த அளவு; இத்தனை.

    ‘இவ்வளவையும் நீதான் எடுத்துக்கொண்டு வந்தாயா?’

  • 2

    (அடையாக வரும்போது) அதிகம் என்று கருதப்படும் இந்த அளவு.

    ‘இவ்வளவு தைரியமா உனக்கு?’