தமிழ் ஈட்டு யின் அர்த்தம்

ஈட்டு

வினைச்சொல்ஈட்ட, ஈட்டி

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (பொருள்) சம்பாதித்தல்.

  ‘அவர் ஈட்டிய பொருள் மூன்று தலைமுறைக்குப் போதும்’
  ‘கவிஞரின் சுயசரிதம் அவருடைய குடும்பத்தாருக்குப் போதுமான பணத்தை ஈட்டித் தந்தது’

 • 2

  உயர் வழக்கு (வெற்றி, அனுபவம், புகழ் முதலியவற்றை) பெறுதல்.

  ‘அவனுடைய அயராத உழைப்பு அவனுக்குப் பெரும் வெற்றியை ஈட்டித் தந்தது’
  ‘வாழ்க்கையில் அவர் ஈட்டிய அனுபவங்கள் ஏராளம்’