தமிழ் ஈடிணை யின் அர்த்தம்

ஈடிணை

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    (வடிவில், குணத்தில், மதிப்பில்) சரிசமம்; (ஒருவருக்கு) ஒப்பு.

    ‘ஈடிணையற்ற அழகி’
    ‘நடனத்தில் இவருக்கு ஈடிணை யாரும் இல்லை’
    ‘தர்மம் செய்வதில் அவருக்கு ஈடிணையாக இன்னொருவரைச் சொல்ல முடியாது’