தமிழ் ஈடுகட்டு யின் அர்த்தம்

ஈடுகட்டு

வினைச்சொல்-கட்ட, -கட்டி

  • 1

    (ஒன்றின் குறையை, இன்மையை மற்றொன்றின் மூலம்) நிறைவுசெய்தல்; சரிக்கட்டுதல்.

    ‘திரைப்படத்தில் பிரபல நடிகர்கள் நடிக்காததை அதன் சிறப்பான கதை ஈடுகட்டுகிறது’
    ‘சத்துக்குறைவால் ஏற்படும் நோய்களை மருந்துகளால் மட்டும் ஈடுகட்ட முடியாது’
    ‘என் அண்ணனின் மறைவை யாராலும் ஈடுகட்ட முடியாது’