தமிழ் ஈடுகொடு யின் அர்த்தம்

ஈடுகொடு

வினைச்சொல்-கொடுக்க, -கொடுத்து

 • 1

  (ஒருவரின் திறமைக்கு மற்றொருவர்) நிகராக நிற்றல்; சமமாக இருத்தல்.

  ‘பெரியவரின் வேகத்துக்கு ஈடுகொடுத்துச் சிறுவன் நடந்தான்’
  ‘குத்துச்சண்டையில் ஐந்தாவது சுற்றுவரை தமிழக வீரர் ஈடுகொடுத்துச் சண்டையிட்டார்’
  ‘பாடியவரின் கற்பனைக்குப் பக்கவாத்தியக்காரர் திறமையாக ஈடுகொடுத்து வாசித்தார்’

 • 2

  (சூழலுக்கு) தகுந்தாற்போல் நடத்தல்.

  ‘பலருடைய விருப்புவெறுப்புகளுக்கு ஈடுகொடுத்துத்தான் குடும்பம் நடத்த வேண்டியிருக்கிறது’