தமிழ் ஈடுபடு யின் அர்த்தம்

ஈடுபடு

வினைச்சொல்-பட, -பட்டு

 • 1

  (ஒரு செயலில்) முனைதல்; இறங்குதல்.

  ‘சுயமாகத் தொழில் தொடங்குவதில் நண்பர் மும்முரமாக ஈடுபட்டார்’
  ‘கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தில் சில நிறுவனங்கள் ஈடுபட்டிருக்கின்றன’
  ‘கள்ளக்கடத்தலில் ஈடுபட்டிருந்த கூட்டம் பிடிபட்டது’

 • 2

  (ஒன்றில்) நாட்டம் கொள்ளுதல்; (மனம்) ஒன்றுதல்.

  ‘இசையில் தன்னை மறந்து ஈடுபட்டிருந்தார்’
  ‘வீட்டுப் பிரச்சினைகள் காரணமாக அவனால் எதிலும் ஈடுபட முடியவில்லை’