தமிழ் ஈடுபடுத்து யின் அர்த்தம்

ஈடுபடுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

 • 1

  (ஒருவரை ஒன்றில்) முனையச் செய்தல் அல்லது இறங்கச் செய்தல்.

  ‘சில அமைச்சர்களைக் கட்சிப் பணியில் ஈடுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது’
  ‘இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண் கைது’

 • 2

  (ஒன்றில்) நாட்டம்கொள்ளச் செய்தல்; (மனம்) ஒன்றச் செய்தல்.

  ‘வாழ்க்கையின் இயந்திர கதியை மாற்ற அவர் தன்னை இசையில் ஈடுபடுத்திக்கொண்டார்’