தமிழ் ஈடேற்று யின் அர்த்தம்

ஈடேற்று

வினைச்சொல்ஈடேற்ற, ஈடேற்றி

 • 1

  (எண்ணத்தை, விருப்பத்தை) நிறைவேற்றுதல்; (கனவை) உண்மையாக்குதல்.

  ‘வாசகர்களின் விருப்பத்தை ஈடேற்றும் வகையில் இதழ் அமைந்துள்ளது’
  ‘தன் தாயின் ஆசையை ஈடேற்ற அவன் உறுதிபூண்டான்’

 • 2

  (பெரும்பாலும் சமயத் துறையில்) (உலக வாழ்வின் இன்பதுன்பங்களிலிருந்து) விடுவித்தல்; மீட்சி.

  ‘இறைவன் தன்னை ஈடேற்றுவான் என்று அவர் உறுதியாக நம்பினார்’