தமிழ் ஈடேறு யின் அர்த்தம்

ஈடேறு

வினைச்சொல்ஈடேற, ஈடேறி

  • 1

    (நோக்கம், விருப்பம்) நிறைவேறுதல்; (கனவு) உண்மையாதல்.

    ‘சதிகாரர்களின் திட்டம் மட்டும் ஈடேறியிருந்தால் நாம் நம் தலைவரை இழந்திருப்போம்’

  • 2

    (பெரும்பாலும் சமயத் துறையில்) (உலக வாழ்வின் இன்பதுன்பங்களிலிருந்து ஒருவர்) மீளுதல்.

    ‘பக்தியால் ஈடேறலாம் என்பது அடியார்களின் நம்பிக்கை’