தமிழ் ஈன் யின் அர்த்தம்

ஈன்

வினைச்சொல்ஈன, ஈன்று

 • 1

  (பெண்ணைக் குறித்து வரும்போது) குழந்தையைப் பெறுதல்; (விலங்குகளைக் குறித்து வரும்போது) கன்று போடுதல் அல்லது குட்டிபோடுதல்.

  ‘என்னை ஈன்ற தாய்’
  ‘தான் ஈன்ற கன்றைப் பசு நக்கிக்கொடுத்தது’
  ‘புலி தன் குட்டியை ஈன உரிய இடத்தைத் தேர்ந்தெடுக்கிறது’
  ‘ஈனாக் கிடாரி’
  உரு வழக்கு ‘என்னை ஈன்ற தாய்நாடு’