தமிழ் ஈயோட்டு யின் அர்த்தம்

ஈயோட்டு

வினைச்சொல்-ஓட்ட, -ஓட்டி

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (வேலை இல்லாததால்) சும்மா இருத்தல்.

  ‘வீட்டில் உட்கார்ந்து ஈயோட்டவா இவ்வளவு படித்தாய்?’

 • 2

  பேச்சு வழக்கு (ஒரு இடத்திற்கு என்று இயல்பாக உள்ள) பரபரப்பு குறைந்து காணப்படுதல்/(வியாபாரம் போன்றவை) மந்த கதியில் நடத்தல்.

  ‘தொலைக்காட்சியின் ஆதிக்கத்தால் பல திரையரங்குகள் ஈயோட்டிக்கொண்டிருக்கின்றன’
  ‘பண்டிகைக் காலங்களைத் தவிர மற்ற நாட்களில் ஜவுளிக் கடை ஈயோட்டுகிறது’