தமிழ் ஈரம் யின் அர்த்தம்

ஈரம்

பெயர்ச்சொல்

 • 1

  நீரில் நனைவதால் பொருள்களில் காணப்படும் நீர்த்தன்மை.

  ‘ஈரப் புடவையைக் கொடியில் காயப் போட்டாள்’
  ‘நேற்று பெய்த மழையால் பூமி ஈரமாக இருக்கிறது’

 • 2

  கண்ணீர்.

  ‘கண்களின் ஓரத்தில் ஈரம் பளபளத்தது’

 • 3

  நீர்த்துளி.

  ‘ஈரம் சொட்டும் தலையுடன் குளியல் அறையிலிருந்து வெளிப்பட்டாள்’

 • 4

  ஈரப்பதம்.

  ‘ஈரக் காற்று வீசுவது மழை வருவதற்கான அறிகுறி’

 • 5

  இரக்கம்; கருணை.

  ‘நெஞ்சில் ஈரம் இருந்தால் அவள் இப்படிப் பேசுவாளா?’