தமிழ் ஈ காக்கை யின் அர்த்தம்

ஈ காக்கை

பெயர்ச்சொல்

  • 1

    (ஓர் இடத்தில் ஆட்களின் நடமாட்டம் இல்லை என்பதைக் குறிப்பிடும்போது) மிகச் சிறிய உயிரினங்கள்.

    ‘இரவு ஒன்பது மணி ஆகிவிட்டால் போதும். இந்தத் தெருவில் ஈ காக்கையைப் பார்க்க முடியாது’
    ‘இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமைகளில்தான் கூட்டம் அதிகமாக இருக்கும். மற்ற நாட்களில் ஈ காக்கைகூட இருக்காது’