தமிழ் உக்கிரம் யின் அர்த்தம்

உக்கிரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (சில இயற்கைச் சக்திகளின்) கடுமை; தீவிரம்.

  ‘வெயில் உக்கிரமாக அடித்தது’
  ‘காற்றின் உக்கிரம் குறைந்தால்தான் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்வார்கள்’

 • 2

  (உணர்ச்சியின், செயலின்) தீவிரத் தன்மை.

  ‘கோபத்தின் உக்கிரம் கண்ணில் தெரிந்தது’
  ‘தருமனும் துரோணரும் உக்கிரமாகப் போரிட்டனர்’
  ‘கையில் சூலாயுதத்துடன் காளி உக்கிரமாகக் காட்சி அளித்தாள்’
  ‘தூணிலிருந்து வெளிப்பட்ட நரசிம்மன்போல அவர் உக்கிரத்துடன் காணப்பட்டார்’