தமிழ் உகந்த யின் அர்த்தம்

உகந்த

பெயரடை

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு பொருத்தமான; ஏற்ற.

  ‘இது தொழில் தொடங்குவதற்கு உகந்த இடம்தானா என்று பார்க்க வேண் டும்’
  ‘ஆராய்ச்சிக்கு உகந்த சூழ்நிலை இங்கே இருக்கிறது’

 • 2

  உயர் வழக்கு (நினைத்ததற்கு) ஏற்ற; விருப்பமான.

  ‘மனத்துக்கு உகந்த மனைவி கிடைத்த மகிழ்ச்சி’