தமிழ் உச்சகட்டம் யின் அர்த்தம்

உச்சகட்டம்

(உச்சக்கட்டம்)

பெயர்ச்சொல்

 • 1

  (கதை, திரைப்படம் போன்றவற்றில்) பெரும்பாலும் முடிவுக்கு முன்னால் வரும், பரபரப்பூட்டும் திருப்பமாக அமையும் முக்கியமான பகுதி.

  ‘திரைப்படத்தின் மயிர்க்கூச்செறியும் உச்சக்கட்டக் காட்சி!’

 • 2

  (ஒரு செயல்பாடு அடையும்) மிகத் தீவிரமான நிலை.

  ‘விவாதம் சூடுபிடித்து உச்சகட்டத்தை அடைந்தது’
  ‘இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் உச்சக்கட்டத்தில்தான் நான் அரசியலில் நுழைந்தேன்’
  ‘கரகாட்டத்தின் உச்சகட்டத்தில் கலைஞர்கள் அதிவேகமாகச் சுழன்று ஆடுவார்கள்’
  ‘நிறுவனத்தின் வளர்ச்சி உச்சக்கட்டத்தை எட்டியபோது புதிய பிரச்சினைகள் உருவாயின’
  ‘வேலைநிறுத்தப் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது’