தமிழ் உச்சம் யின் அர்த்தம்

உச்சம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரு செயல், உணர்ச்சி போன்றவை அடையும்) தீவிரம் அல்லது அதிகபட்ச அளவு.

  ‘நிர்வாகத்தின் பிடிவாதப் போக்கினால் தொழிலாளர்களின் கோபம் உச்சத்தை எட்டியது’
  ‘நான் சுதந்திரப் போராட்டத்தில் நுழைந்தபோது அது உச்சத்தில் இருந்தது’
  ‘வெற்றி கிடைத்த மகிழ்ச்சியின் உச்சத்தில் அவனுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை’

 • 2

  (ஒன்று அல்லது ஒருவர் அடையும்) மிக உயர்ந்த நிலை.

  ‘இந்தப் படத்தில் நடிப்பின் உச்சத்தை அந்த நடிகர் தொட்டுவிட்டார்’
  ‘சூரிய கிரகணம் குறித்த ஆராய்ச்சிக்குப் பிறகு அவர் புகழ் உச்சத்திற்குப் போயிற்று’

 • 3

  சோதிடம்
  (ஜாதகத்தில் ஒரு கிரகம் செயல்படும்) தீவிரமான நிலை.

  ‘இவருடைய ஜாதகத்தில் வாக்கு ஸ்தானத்தில் குரு உச்சம் பெற்றிருக்கிறார்’
  ‘மூன்று கிரகங்கள் உச்சம் அடைந்திருப்பது இவர் ஜாதகத்தின் சிறப்பு’