தமிழ் உசுப்பு யின் அர்த்தம்
உசுப்பு
வினைச்சொல்
- 1
(பாய்ந்து தாக்குமாறு) ஏவுதல்.
‘திருடன் மேல் நாயை உசுப்பிவிட்டார்’‘உசுப்பிவிடப்பட்ட சேவல்கள் ஆக்ரோஷமாகச் சண்டையிடத் தொடங்கின’ - 2காண்க: உசுப்பேற்று
- 3
(செயல்பட) தூண்டுதல்.
‘மனைவியின் பேச்சு அவரை உசுப்பியது’‘‘சும்மா இருக்காதே, ஏதாவது செய்’ என்று என் மனம் என்னை உசுப்பிவிட்டுக்கொண்டிருக்கிறது’ - 4
(தூக்கத்திலிருந்து) எழுப்புதல்.
‘தோளில் கை வைத்து உசுப்பினாள்’