தமிழ் உட்கொள் யின் அர்த்தம்

உட்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (வாய் வழியாக உணவு முதலியவற்றை) உள்ளே இறங்கச் செய்தல்; சாப்பிடுதல்.

  ‘உட்கொண்ட உணவும் மருந்தும் ஒத்துக்கொள்ளவில்லை’
  ‘பெரிய மீன்கள் சிறிய மீன்களை உணவாக உட்கொள்கின்றன’

 • 2

  உயர் வழக்கு உறிஞ்சுதல்.

  ‘காற்று நீராவியை உட்கொண்டு மேகமாக மாறுகிறது’

 • 3

  உயர் வழக்கு (ஒன்று மற்றொன்றை உறுப்பாக) கொண்டிருத்தல்; அடக்கியிருத்தல்.

  ‘இந்தச் சட்டம் பல பிரிவுகளை உட்கொண்டிருக்கிறது’