தமிழ் உட்செலுத்து யின் அர்த்தம்

உட்செலுத்து

வினைச்சொல்-செலுத்த, -செலுத்தி

 • 1

  (உள்ளீடற்ற பொருளில், துவாரம் முதலியவற்றில் ஒன்றை) நுழைத்தல்.

  ‘இரும்புக் குழாயில் கம்பியை உட்செலுத்தி அடைப்பை நீக்கினார்’

 • 2

  (ஒன்றை) உள்ளே போகச் செய்தல்.

  ‘மருத்துவர்கள் மருந்துகளை உட்செலுத்தி நோய்க் கிருமிகளை அழிக்கின்றனர்’
  ‘காற்று உட்செலுத்தப்பட்ட ரப்பர் வளையங்கள்’