தமிழ் உடன்பாடு யின் அர்த்தம்

உடன்பாடு

பெயர்ச்சொல்

 • 1

  (பிறருடைய கருத்து, செயல் முதலியவற்றை) ஏற்றுக்கொள்ளும் இணக்கம்; சம்மதம்.

  ‘அவருடைய கருத்துகளுடன் எனக்கு உடன்பாடு உண்டு’
  ‘தவறுகளை மறைப்பது எனக்கு உடன்பாடு இல்லாத விஷயம்’

 • 2

  உடன்படிக்கை; ஒப்பந்தம்.

  ‘எங்களுக்குள் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை’

 • 3

  இலக்கணம்
  கூற்றின் மறுப்பு இல்லாத தன்மையை விவரிப்பது.

  ‘‘அவன் வந்தான்’ என்பது ஓர் உடன்பாட்டு வாக்கியம்’