தமிழ் உடன்பிறந்த யின் அர்த்தம்

உடன்பிறந்த

பெயரடை

 • 1

  ஒரே தாய்க்குப் பிறந்த; கூடப்பிறந்த.

  ‘‘இவர் உன் பெரியப்பா பையனா?’ ‘இல்லை, என் உடன்பிறந்த சகோதரன்.’’
  ‘நான் உன்னை உடன்பிறந்த சகோதரனாகவே கருதுகிறேன்’

 • 2

  (பிறந்ததிலிருந்தே ஒருவரிடம்) இயல்பாகக் காணப்படும்/(ஒருவரால் எளிதில்) விட்டுவிட முடியாத.

  ‘ஏழைகளுக்கு உதவுவது என்பது அவரது உடன்பிறந்த குணம்’
  ‘பிடிவாதம் என்பது உன்னுடைய உடன்பிறந்த குணம்’
  ‘பலருக்குப் பணத்தாசை உடன்பிறந்த வியாதி ஆகிவிட்டது’