தமிழ் உடனுக்குடன் யின் அர்த்தம்
உடனுக்குடன்
வினையடை
- 1
ஒரு செயல் நிகழ்ந்ததுமே அதற்குத் தொடர்பான செயல்பாடுகளைச் சற்றும் தாமதிக்காமல்; உடனடியாக.
‘வந்த கடிதங்களுக்கு தாத்தா உடனுக்குடன் பதில் எழுதிவிடுவார்’‘பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்துவிட்டால் நிம்மதியாக இருக்கலாம்’‘வெவ்வேறு இடங்களிலிருந்து வந்த ஓவியங்கள் உடனுக்குடன் சட்டமிடப்பட்டுக் கண்காட்சியில் வைக்கப்பட்டன’