தமிழ் உட்படு யின் அர்த்தம்

உட்படு

வினைச்சொல்-பட, -பட்டு

 • 1

  (ஒன்றின்) வரம்புக்குள் அல்லது எல்லைக்குள் அமைந்திருத்தல்.

  ‘நகரப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இருக்கின்றன’
  ‘14 வயதுக்கு உட்பட்ட சிறார்களைப் பணிக்கு அமர்த்தக் கூடாது’
  ‘இந்தச் சிறிய வீடுதான் எங்கள் வசதிக்கு உட்பட்டது’

 • 2

  (வரைமுறை, சட்டம் போன்றவற்றுக்கு ஒருவர்) கட்டுப்படுதல்.

  ‘ஒப்பந்தத்தின் வரையறைகளுக்குள் உட்பட்ட அதிகாரங்கள் இவை’
  ‘சாலை விதிகளுக்கு உட்பட்டே வாகனங்களை ஓட்ட வேண்டும்’
  ‘இலக்கியம் என்பது சட்டதிட்டங்களுக்கு உட்படாதது’

 • 3

  (ஒரு நிலைமைக்கு) ஆளாதல்.

  ‘லஞ்ச ஊழலுக்கு உட்படாத அதிகாரிகள் அநேகர் உண்டு’
  ‘மாற்றத்திற்கும் மரணத்துக்கும் உட்பட்ட உலக வாழ்க்கை’
  ‘தொழிற்சங்கங்கள் ஏதாவது ஒரு அரசியல் கட்சியின் செல்வாக்குக்கு உட்பட்டு இயங்குவதை நாம் பார்க்கலாம்’
  ‘தான் குறிப்பிட்ட கொள்கைக்கோ நோக்கத்துக்கோ உட்பட்டவரல்ல என்று கூறினார்’
  ‘17 வயதில் பெரியாராலும் 19 வயதில் மார்க்சியத்தாலும் பெரும் தாக்கங்களுக்கு உட்பட்டேன்’
  ‘ரயில் நிறுத்தப் போராட்டத்தால் பயணிகள் பெரும் துன்பத்துக்கு உட்பட வேண்டியதாயிற்று’