தமிழ் உட்படுத்து யின் அர்த்தம்

உட்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

 • 1

  (சோதனை, ஆய்வு, கட்டுப்பாடு முதலியவற்றுக்கு) உள்ளாக்குதல்.

  ‘பொது விதிகளுக்கு உட்படுத்த முடியாதவை விதி விலக்குகளாகின்றன’
  ‘எதையும் ஆய்வுக்கு உட்படுத்தாமல் அவரால் ஏற்றுக்கொள்ள முடியாது’
  ‘தற்போது இயங்கிவரும் கல்வி நிறுவனங்கள் இந்தப் புதிய வரைமுறைக்கு உட்படுத்தப்படும்’
  ‘உற்பத்தி செய்யப்படும் அனைத்துப் பொருள்களும் கட்டாயமாகத் தர நிர்ணயத்துக்கு உட்படுத்தப்பட வேண்டும்’

 • 2

  (தண்டனை, தொல்லை போன்றவற்றை ஒருவர்) அனுபவிக்கும்படி செய்தல்.

  ‘ஒரே குற்றத்திற்காக ஒருவரை இரண்டு முறை தண்டனைக்கு உட்படுத்த முடியாது’
  ‘தென்னாப்பிரிக்காவில் நிறவெறி அரசால் காந்தி பல அல்லல்களுக்கு உட்படுத்தப்பட்டார்’