தமிழ் உட்புகு யின் அர்த்தம்

உட்புகு

வினைச்சொல்-புக, -புகுந்து

 • 1

  (திரவம் அல்லது ஒலி, ஒளி போன்றவை ஒன்றினுள்) செல்லுதல்.

  ‘உடைபட்ட குடிநீர்க் குழாய்க்குள் சாக்கடை நீர் உட்புகும் அபாயம் உண்டு’
  ‘செவியினுள் அளவுக்கதிகமான ஒலி உட்புகும் பட்சத்தில், அது செவிப்பறையைப் பாதிக்கும்’

 • 2

  (ஒன்றின் வழியே) ஊடுருவுதல்.

  ‘சாயம் பூசப்பட்ட கண்ணாடியில் ஒளி உட்புக முடியாது’

 • 3

  (திரவம், வாயு போன்றவை ஒன்றுக்குள்) கசிதல்.

  ‘கடலோரப் பகுதிகளில் நிலத்தடி நீர் அதிக அளவில் எடுக்கப்படும்போது கிணறுகளில் கடல் நீர் உட்புகும் வாய்ப்பு அதிகம்’