தமிழ் உட்பொருள் யின் அர்த்தம்

உட்பொருள்

பெயர்ச்சொல்

 • 1

  வெளிப்படையாக அல்லது மேலோட்டமாகத் தெரியாத பொருள்; மறைபொருள்.

  ‘ஒவ்வொரு சடங்குக்கும் உட்பொருள் இருக்கிறது என்று அவர் வாதாடினார்’
  ‘சித்தர் பாடல்களின் உட்பொருளைப் புரிந்துகொள்வது கடினம்’

 • 2

  உட்கருத்து.

  ‘இது சமூக மாற்றத்தை உட்பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்’