தமிழ் உடம்பு யின் அர்த்தம்

உடம்பு

பெயர்ச்சொல்

 • 1

  (பெரும்பாலும்) மனித உடல்.

  ‘அண்ணன் திட்டத்திட்ட, என் உடம்பில் உஷ்ணம் கூடியது’
  ‘அவனுடைய மெலிந்த உடம்பைப் பார்த்து நான் அதிர்ந்துபோனேன்’

 • 2

  (ஒருவருடைய) உடல்நிலை.

  ‘நான்கு மாதங்களாக உடம்பு சரியில்லை என்று அவன் சொன்னான்’
  ‘‘உடம்பைப் பார்த்துக் கொள்’ என்று அப்பா சொன்னார்’