தமிழ் உடம்புக்கு வா யின் அர்த்தம்

உடம்புக்கு வா

வினைச்சொல்வர, வந்து

  • 1

    (ஒருவர்) நோயினால் பாதிக்கப்படுதல்; உடல்நலம் குறைதல்.

    ‘வெயில் மழை என்று பார்க்காமல் அலைகிறாய். உடம்புக்கு வந்தால் யார் கஷ்டப்படுவது?’
    ‘வெளியில் கண்டதையும் வாங்கிச் சாப்பிட்டால் உடம்புக்கு வரும் என்று உனக்குத் தெரியாதா?’