தமிழ் உடல் யின் அர்த்தம்

உடல்

பெயர்ச்சொல்

 • 1

  (மனிதனின் அல்லது விலங்கின்) முழு உருவம்; உடம்பு.

  ‘உடல் தசைகள் வளர்ச்சிபெறுவதற்குப் புரதச்சத்து அவசியம்’
  ‘நடிக்கும்போது உடல் அசைவுகளும் குரல் ஒலியும் ஒருங்கிணைய வேண்டும்’
  ‘உருண்டைப் புழுக்களும் தட்டைப் புழுக்களும் உடல் அமைப்பில் வேறுபடுகின்றன’
  ‘அவருக்குச் சிறிய உடல்; பெரிய தலை’

 • 2

  உயிரற்ற உடம்பு; சடலம்.

  ‘தலைவரின் உடல் இன்று மாலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுத் தகனம் செய்யப்படும்’
  ‘இறந்த யானையின் உடலை வனத்துறையினர் புதைத்தனர்’

 • 3

  முண்டம்.

  ‘தலை வேறு, உடல் வேறாக எதிரியை அவன் வெட்டி எறிந்தான்’
  ‘கோயிலில் அரவானின் உடலற்ற மூன்றடி உயரத் தலை மட்டுமே சிலை வடிவில் வைக்கப்பட்டுள்ளது’