தமிழ் உண்டாக்கு யின் அர்த்தம்

உண்டாக்கு

வினைச்சொல்உண்டாக்க, உண்டாக்கி

 • 1

  படைத்தல்; தோற்றுவித்தல்.

  ‘பிரபஞ்சத்தை உண்டாக்கிய சக்தி எது?’
  ‘இந்த நாவலில் அவர் உண்டாக்கியுள்ள பாத்திரங்கள் நம் நெஞ்சை விட்டு நீங்காது’

 • 2

  (ஒன்றை) உற்பத்தி செய்தல்.

  ‘தரிசு நிலத்தில் பயிரை உண்டாக்கக் கடுமையாகப் பாடுபட வேண்டும்’
  ‘தொழிற்சாலை உண்டாக்கும் கழிவுகளை ஆற்றில் கலக்கவிடக் கூடாது’

 • 3

  (ஒலி, ஒளி, நெருப்பு முதலியவற்றை) ஏற்படுத்துதல்.

  ‘நாக்கை மடித்து வினோத ஒலியை உண்டாக்கினான்’
  ‘காட்டுக்கு நடுவில் நெருப்பை உண்டாக்கிக் குளிர்காய்ந்தார்கள்’

 • 4

  (கட்டடம் போன்றவற்றை) நிர்மாணித்தல்.

  ‘புதிய நகரத்தை உண்டாக்கிய வல்லுநர்களை அரசு பெருமைப்படுத்தியது’
  ‘ராஜராஜ சோழன் உண்டாக்கிய கோவில்’

 • 5

  (நிறுவனம் போன்றவற்றை) தோற்றுவித்தல்.

  ‘பல கல்வி நிலையங்களை உண்டாக்கிய தொழிலதிபரின் நினைவு நாள்’
  ‘தொழிற்கூடங்களை உண்டாக்குவதன்மூலமே நாம் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும்’

 • 6

  (நகரம், மாவட்டம் போன்றவற்றை) உருவாக்குதல்.

  ‘இரண்டு மாவட்டங்களிலிருந்தும் சில பகுதிகளைப் பிரித்துப் புதிய மாவட்டம் உண்டாக்கப்பட்டது’
  ‘வங்க தேசத்தை உண்டாக்கியதில் இந்தியாவுக்கும் பங்கு உண்டு’

 • 7

  (அமைப்பு, ஆட்சி போன்றவற்றை) தோற்றுவித்தல்.

  ‘புதிய சமுதாயத்தை உண்டாக்கப் பாடுபடுவோம்’
  ‘அவர் உண்டாக்கிய கட்சி, அவர் மறைந்த சில ஆண்டுகளிலேயே சின்னாபின்னமாகிவிட்டது’

 • 8

  (ஒரு பரப்பில் ஒரு குறிப்பிட்ட மாற்றம், வடிவம் போன்றவற்றை) ஏற்படுத்துதல்; உருவாக்குதல்.

  ‘பூகம்பம் நிலப்பகுதியில் பெரும் பள்ளங்களை உண்டாக்கிவிட்டது’
  ‘வேலியில் ஒரு ஆள் செல்வதற்கு ஏற்ற திறப்பை உண்டாக்கினான்’

 • 9

  (குறிப்பிட்ட சூழல், தன்மை போன்றவற்றை) விளைவித்தல்.

  ‘கொலை செய்தது தன்னுடைய சகோதரனே என்று கூறி வழக்கில் ஒரு திருப்பத்தை உண்டாக்கினான்’
  ‘கலவரம் உண்டாக்கியவர்களை உடனடியாகக் கைதுசெய்ய அரசு உத்தரவிட்டது’

 • 10

  (குறிப்பிட்ட உணர்வை) ஏற்படுத்துதல்.

  ‘அவனுடைய தோற்றம் எங்களுக்குப் பயத்தை உண்டாக்கியது’
  ‘எப்போதும் திரைப்படங்களைப் பற்றிப் பேசிச் சலிப்பை உண்டாக்காதே’
  ‘அவருடைய பகிரங்கமான பேச்சு நாடு முழுதும் பரபரப்பை உண்டாக்கியது’