தமிழ் உண்டு யின் அர்த்தம்

உண்டு

வினைச்சொல்

 • 1

  திணை, பால் வேறுபாடு இல்லாமல் பயன்படுத்தப்படுவதும் ‘இரு’ என்னும் வினையின் ‘ஓர் இடத்தில் வந்தமைதல்’, ‘உடையதாக இருத்தல்’ என்னும் பொருளில் வருவதுமாகிய ஒரு வினைமுற்று.

  ‘உலகத்தில் நல்லவர்களும் உண்டு, கெட்டவர்களும் உண்டு’
  ‘தவறு செய்தால் கண்டிக்கும் தைரியம் அவருக்கு உண்டு’
  ‘புளியம்பூவுக்கு வாசனை உண்டா?’

 • 2

  (தொடர்ந்தோ விட்டுவிட்டோ) ஒரு நிகழ்ச்சி வழக்கமாக நடைபெற்றது அல்லது நடைபெறுகிறது என்பதைக் குறிப்பிட ‘அது’ என்னும் விகுதியை அடுத்து வரும் வினைமுற்று.

  ‘இந்த மாணவன் சரியாகப் படிக்கவில்லை என்று அவனுடைய பெற்றோரிடம் நான் சொன்னதுண்டு’
  ‘என் குழந்தை இரவில் அழுவதுண்டு’
  ‘சித்திரையிலும் புயல் வந்தது உண்டு’
  ‘அவர் எப்போதாவது கடற்கரைக்குப் போவதுண்டு’

 • 3

  ஒருவர் தன் செயல்களை மட்டுப்படுத்திக்கொள்வதைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் வினைமுற்று.

  ‘அவர் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறவர்’
  ‘இந்தக் காலத்தில் கல்லூரி உண்டு, படிப்பு உண்டு என்று மாணவர்கள் இருந்துவிடுவதில்லை’

 • 4

  (பெரும்பாலும் நிபந்தனை வாக்கியத்தில்) குறிப்பிடப்படும் ஒன்று நிகழ்ந்தால் மட்டுமே எதிர்பார்க்கும் விளைவு சாத்தியம் என்பதை உணர்த்தப் பயன்படுத்தும் வினைமுற்று.

  ‘அவர் இன்று பணம் கொடுத்தால்தான் உண்டு’
  ‘பேருந்து வந்தால்தான் உண்டு. இல்லையென்றால் நாம் எல்லாரும் நடந்துதான் போக வேண்டும்’
  ‘தண்ணீர்ப் பிரச்சினைக்காக யாராவது நடவடிக்கை எடுத்தால்தான் உண்டு’