தமிழ் உண்டுபண்ணு யின் அர்த்தம்

உண்டுபண்ணு

வினைச்சொல்-பண்ண, -பண்ணி

  • 1

    (குறிப்பிட்ட நிலை, தன்மை போன்றவற்றை) உண்டாக்குதல்.

    ‘புயல் இவ்வளவு சேதத்தை உண்டுபண்ணும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை’
    ‘இந்தப் புத்தகம் பறவைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டுபண்ணும்’
    ‘மனத்துக்குப் பிடிக்காத வேலையைச் செய்ய வேண்டும் என்ற எண்ணமே அவனுக்கு வெறுப்பை உண்டுபண்ணியது’