தமிழ் உண்ணி யின் அர்த்தம்

உண்ணி

பெயர்ச்சொல்

  • 1

    (ஆடு, மாடு, நாய் போன்ற விலங்குகளின் தோலில் ஒட்டிக்கொண்டு) இரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் மிகச் சிறிய உயிரினம்.

  • 2

    (விலங்குகளைக் குறிப்பிடும்போது தாவரத்தையோ மாமிசத்தையோ) உணவாகக் கொள்ளும் உயிரினம்.

    ‘தாவர உண்ணிகள்’
    ‘கழுகு ஒரு புலால் உண்ணி’