தமிழ் உண்மை யின் அர்த்தம்

உண்மை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  மறுக்க முடியாதது; பொய் அல்லாதது; சத்தியம்.

  ‘அவன் இந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறான் என்பது உண்மை என்றால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’
  ‘‘ஐயோ, பேராசை பேரிழப்பு’ என்பது உண்மையாக இருக்கிறதே என்று வருந்தியது ஓநாய்’

 • 2

  போலி அல்லாதது.

  ‘இது காகிதப் பூ அல்ல, உண்மையான பூ’
  ‘இது என் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம்’

 • 3

  கற்பனைக்கு மாறானது; யதார்த்தத்தில் காணப்படுவது.

  ‘இது உன் கற்பனை இல்லையே, உண்மைதானே?’
  ‘உண்மை நிலவரத்தைத் தெரிந்துகொண்டு பேசு’

 • 4

  முறைபிறழாதது; நேர்மை.

  ‘பல காலம் உண்மையாக உழைத்தும் பயன் இல்லை’
  ‘உண்மை நண்பன்’
  ‘உண்மை ஊழியர்’

 • 5

  இயல்பில் அமைந்திருப்பது.

  ‘உண்மையான திறமையை வெளிக்காட்ட ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது’
  ‘அவனுடைய உண்மையான குணம் இன்று வெளிப்பட்டது’

 • 6

  அறிவாலும் அனுபவத்தாலும் அறியப்படுவது.

  ‘தத்துவ உண்மைகள்’
  ‘அனுபவ உண்மைகள்’