தமிழ் உணர் யின் அர்த்தம்

உணர்

வினைச்சொல்உணர, உணர்ந்து

 • 1

  (உடலிலும் மனத்திலும் ஏற்படும் நிலையைப் புலன்களால்) அனுபவித்து அறிதல்.

  ‘அறைக்குள் நுழைந்ததும் ஒரு குளுமையை உணர்ந்தேன்’
  ‘குனியும்போது முதுகில் வலியை உணர முடிந்தது’
  ‘பழைய நினைவுகளைச் சொல்வதில் துன்பத்தையும் இன்பத்தையும் உணர்கிறேன்’

 • 2

  புரிந்துகொள்ளுதல்.

  ‘என் மனநிலையை உணராமல் அவர் பேசிக்கொண்டிருந்தார்’
  ‘தரமான இலக்கியம் எது என்பதை உணர்வதற்குப் பயிற்சி அவசியம்’

 • 3

  (ஒரு நிலையோ தன்மையோ மனத்திற்கு) தெரியவருதல்.

  ‘நான் செய்தது தவறு என்பதை உணர்கிறேன்’
  ‘அவர் இப்போதுதான் சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறார்’