தமிழ் உணர்ச்சி யின் அர்த்தம்

உணர்ச்சி

பெயர்ச்சொல்

 • 1

  உடலில் அல்லது மனத்தில் ஏற்படும் நிலையை அறிவதால் ஏற்படும் அனுபவம்; தொடுவதை அறியும் திறன்.

  ‘கட்டைவண்டியின் ஆட்டம் தொட்டிலில் போட்டுத் தூங்கவைப்பது போன்ற உணர்ச்சியை எனக்குத் தந்தது’
  ‘கால் மரத்துப்போய் உணர்ச்சியே இல்லாமல் ஆகிவிட்டது’

 • 2

  (மனத்தால் அனுபவிக்கும் கோபம், அன்பு, பரிவு, பொறாமை போன்ற) நிலை.

  ‘நாம் வெகு எளிதாக உணர்ச்சிகளுக்கு அடிமையாகிவிடுகிறோம்’
  ‘இந்தக் கதையில் ஒரு தாயின் உணர்ச்சிகளை ஆசிரியர் அழகாகச் சித்தரிக்கிறார்’
  ‘இன்றைய விழாவில் அமைச்சர் உணர்ச்சி ததும்பப் பேசினார்’

 • 3

  குறிப்பிடப்படும் தன்மை அல்லது இயல்பைக் கொண்டிருக்கும் அல்லது வெளிப்படுத்தும் நிலை.

  ‘அவருக்கு அபாரமான நகைச்சுவை உணர்ச்சி!’
  ‘காட்டைப் பற்றிய அவரது விவரிப்பில் அழகுணர்ச்சி வெளிப்படுகிறது’