தமிழ் உணர்ச்சிவசப்படு யின் அர்த்தம்

உணர்ச்சிவசப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

 • 1

  அறிவை மீறிய மனநிலைக்கு ஆட்படுதல்.

  ‘அவையில் உறுப்பினர்கள் உணர்ச்சிவசப்பட்டுப் பேச ஆரம்பித்தனர்’
  ‘எதிர்பாராத வகையில் உதவி கிடைத்ததும் அவன் உணர்ச்சிவசப்பட்டுப்போனான்’
  ‘பதவியேற்றபோது அமைச்சர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார்’
  ‘உணர்ச்சிவசப்பட்டு செய்த குற்றம் இது என்று வழக்கறிஞர் கூறினார்’