தமிழ் உணர்த்து யின் அர்த்தம்

உணர்த்து

வினைச்சொல்உணர்த்த, உணர்த்தி

 • 1

  (ஒரு தகவலை) தெரிந்துகொள்ளச் செய்தல்; புரியவைத்தல்.

  ‘குளிர் நாடு என்பதை மக்கள் அணிந்திருக்கும் ஆடையே உணர்த்திவிடும்’
  ‘என் மனநிலையை அவர்களுக்கு உணர்த்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது’
  ‘நாம் சும்மா இருப்பது கோழைத்தனத்தால் அல்ல என்பதை அவர்களுக்கு உணர்த்துவோம்’

 • 2

  குறிப்பிடுதல்.

  ‘இந்த ஓவியம் எதை உணர்த்துகிறது?’
  ‘‘ன்’ விகுதி பெரும்பாலும் ஆண்பாலை உணர்த்தும்’