தமிழ் உணர்வு யின் அர்த்தம்

உணர்வு

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்றைக் குறித்த அழுத்தமான அல்லது வலுவான) மனநிலை.

  ‘தான் தவறு செய்துவிட்டோம் என்னும் குற்ற உணர்வு அவனை வருத்தியது’
  ‘சைவ சமய உணர்வு மிக்கவர்’
  ‘இந்தியன் என்கிற உணர்வு’
  ‘தமிழ் உணர்வு’

 • 2

  (ஒன்றைக் குறித்த) தீவிரமான உணர்ச்சி.

  ‘என் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் பேசிவிட்டான்’

 • 3

  உள்ளுணர்வு.

  ‘அவன் இப்படிச் செய்திருக்க மாட்டான் என்று என் உணர்வு சொல்கிறது’

 • 4

  சுய நினைவு; பிரக்ஞை.

  ‘விபத்தில் அடிபட்டு உணர்வில்லாமல் கிடந்தான்’