தமிழ் உத்தரவு யின் அர்த்தம்

உத்தரவு

பெயர்ச்சொல்

 • 1

  சட்டம், விதிமுறை ஆகியவற்றின் அடிப்படையில் அல்லது அதிகாரத்தின் அடிப்படையில் ஒன்றைச் செய்யச் சம்பந்தப்பட்டவர் இடும் கட்டளை; ஆணை.

  ‘சாலை விதிகளை மீறுபவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளும்படி காவல்துறை அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்’
  ‘பரீட்சை முடிகிறவரை சினிமாவுக்குப் போகக் கூடாது என்பது அப்பாவின் உத்தரவு’

 • 2

  அனுமதி.

  ‘இந்தத் தொழிற்சாலையைச் சுற்றிப்பார்ப்பதற்கு உத்தரவு பெற வேண்டும்’

 • 3

  (ஒரு செயலைச் செய்யலாமா என்பதைக் குறித்து, தெய்வத்தின் முன்னிலையில் பூப்போட்டுப் பெறும்) குறிப்பு.

  ‘அக்காவுக்கு இந்த வரனை முடிக்கலாமா என்று பூப்போட்டுப் பார்த்ததில் உத்தரவு கிடைத்தது’
  ‘எம்பெருமான் முருகன் உத்தரவு கிடைத்தால் வீட்டை வாங்கிவிடலாம்’