தமிழ் உத்தேசம் யின் அர்த்தம்

உத்தேசம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  மனத்தில் தீர்மானித்துள்ளது; எண்ணம்.

  ‘பட்டம் வாங்கிய பிறகு என்ன செய்வதாக உத்தேசம்?’
  ‘மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் உத்தேசம் இல்லை’

 • 2

  துல்லியமாக இல்லாதது; ஏகதேசம்; தோராயம்.

  ‘அவர் வீட்டை விட்டு வெளியேறியபோது மணி உத்தேசமாக மூன்று இருக்கும்’
  ‘உன் கேள்விக்கு உத்தேசமான ஒரு பதில்தான் தர முடியும்’