தமிழ் உதயம் யின் அர்த்தம்

உதயம்

பெயர்ச்சொல்

 • 1

  (சூரியன், நிலவு, நட்சத்திரம் ஆகியவை வானில்) தோன்றுதல்.

  ‘காலை ஆறு மணிக்குச் சூரிய உதயம்’
  ‘வானில் நட்சத்திரங்களின் உதயம்’

 • 2

  (புதிதாக ஒன்று) தோன்றுதல்.

  ‘இந்த நூற்றாண்டில் கணிப்பொறியின் உதயம் புரட்சிகரமான ஒன்று’
  ‘இந்த எண்ணம் எப்படி உனக்கு உதயமாகியது?’
  ‘வங்க தேசம் என்ற புதிய நாடு உதயமாகியது’

 • 3

  சோதிடம்
  (குழந்தை) பிறப்பு.

  ‘காலை மூன்று முப்பதுக்கு ஆண் குழந்தை உதயம்’

 • 4

  சோதிடம்
  குறிப்பிட்ட கிரகம் கிழக்கில் தோன்றுவது.