தமிழ் உதறல் யின் அர்த்தம்

உதறல்

பெயர்ச்சொல்

  • 1

    (குளிர், பயம் முதலியவற்றால் ஏற்படும்) உடல் நடுக்கம்.

    ‘அவருடைய அதட்டலிலேயே அவனுக்கு உதறல் ஏற்பட்டுவிட்டது’

  • 2

    (ஏற்படவிருக்கும் ஆபத்தை, தண்டனையை நினைக்கும்போது ஏற்படும்) பயம்.

    ‘தான் செய்த தவறு கண்டுபிடிக்கப்பட்டுவிடுமோ என்ற எண்ணம் அவனுள் உதறலை ஏற்படுத்தியது’