தமிழ் உதறு யின் அர்த்தம்

உதறு

வினைச்சொல்உதற, உதறி

 • 1

  (தூசி, அடைப்பு முதலியவை போகும்படியாக) பலமாக அசைத்து வீசுதல்; (கத்தையாக இருப்பது) பிரிந்து விழுமாறு ஆட்டுதல்.

  ‘கீழே விழுந்த துண்டை எடுத்து உதறித் தோளில் போட்டுக்கொண்டார்’
  ‘பேனாவை உதறிஉதறித் தரையெல்லாம் மை’
  ‘மாட்டுக்கு வைக்கோலை உதறிப் போடு’

 • 2

  (சுளுக்கிக்கொண்ட அல்லது மரத்துப்போன காலை) மடக்கி நீட்டி ஆட்டுதல்.

  ‘சுளுக்கிக்கொண்ட காலை உதறிவிட்டுக்கொண்டான்’

 • 3

  (குளிர், பயம் முதலியவற்றால்) நடுங்குதல்.

  ‘குத்தும் குளிரில் கைகால்கள் உதறத் தொடங்கின’

 • 4

  விட்டுவிடுதல்; கைவிடுதல்.

  ‘ஏதோ ஒரு கோபத்தில் வேலையை உதறிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார்’
  ‘குடும்பத்தை உதறிவிட்டுப் போக அவரால் எப்படி முடிந்தது?’