தமிழ் உதவு யின் அர்த்தம்

உதவு

வினைச்சொல்உதவ, உதவி

 • 1

  பயன்படுதல்; உபயோகமாக இருத்தல்.

  ‘நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் எங்கள் பணிக்கு உதவும்’
  ‘நீங்கள் தந்த பணம் தக்க சமயத்தில் உதவிற்று’

 • 2

  (ஒருவர் செய்யும் செயலுக்கு) ஒத்துழைப்பு தருதல்; ஒத்தாசை செய்தல்.

  ‘சமயத்தில் பணம் தந்து நீங்கள் உதவியிருக்கவில்லை என்றால் நான் திண்டாடிப்போயிருப்பேன்’
  ‘நல்ல காரியங்களுக்கு அவர் எப்போதும் உதவுவார்’