தமிழ் உதாரணம் யின் அர்த்தம்

உதாரணம்

பெயர்ச்சொல்

 • 1

  பொது விதிக்கு அல்லது ஒரு கூற்றுக்கு விளக்கமாக அமையும் உண்மை; எடுத்துக்காட்டு.

  ‘திரவ நிலையில் உள்ள உலோகத்துக்கு உதாரணம் பாதரசம்’
  ‘தாராளமாக வாக்கு தருபவர்களை நம்பக் கூடாது என்பதற்கு நீயும் ஓர் உதாரணம்!’

 • 2

  முன்மாதிரி; முன்னுதாரணம்.

  ‘கடுமையான உழைப்புக்கு என் அம்மாவைத்தான் உதாரணமாகக் கொள்ள வேண்டும்’